"திமுக ஆட்சிக்கு வரணும்” - கரூரில் தீக்குளித்த நபர்

Suicide Mk stalin Dmk Karur Senthil balaji
By Petchi Avudaiappan Jul 09, 2021 12:07 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கரூரில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால் தொழிலாளி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே உள்ள மண் மங்கலத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் குலதெய்வக் கோயிலான காளியம்மன் கோவில் உள்ளது. இன்று காலை கோவிலுக்கு வந்த நபரொருவர் தனது பையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

"திமுக ஆட்சிக்கு வரணும்” - கரூரில் தீக்குளித்த நபர் | Retired Person Suicide In Karur Temple

இதைப்பார்த்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிதறி ஓடினர். தீ முற்றிலும் பரவிய நிலையில் அந்த நபர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே அந்த நபர் எழுதிவைத்த வாக்குமூல கடிதத்தில் "திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்றும் நான் இந்த கோயிலில் வேண்டிக் கொண்டேன்.வேண்டுதல் நிறைவேறியதால் நான் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என எழுதியிருந்தார்.

மேலும் தற்கொலை செய்துகொண்ட நபர் லாலாபேட்டையைச் சேர்ந்த உலகநாதன் என்றும் இவர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.