பேங்கில் நகை அடகு வைக்கணுமா? இனி இதுதான் ரூல்ஸ் - மக்கள் அவதி!
நகை அடகு வைப்பது தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நகை அடகு
தங்க நகைகளை அடகு வைத்ததால் பொதுவாக, தங்கள் கடன் தொகையை முழுமையாக கட்டி நகையை திருப்ப முடியவில்லை என்றால் வட்டித் தொகையை மட்டும் கட்டி, மறு அடகு வைக்கமுடியும்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, நகைக்கடனை பொறுத்தவரையில் ஓர் ஆண்டு முடிவில் மொத்த பணத்தையும் கட்டி நகையை திருப்பிக் கொள்ள வேண்டும்.
வங்கி உத்தரவு
திருப்பிய நகையை அதே தினத்தில் மறு கடன் வைக்க முடியாது. ஒரு நாள் முடிந்து, அடுத்த நாள் தான் மீண்டும் புதிய நகைக்கடனை தொடங்க முடியும் நகை கடன் வழங்கும் வங்கிகளில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது.
கடன்களை முடிவுக்கு கொண்டு வராமல் தொடர்ந்து நகைக்கடன் ஐந்து வருடம், 10 வருடம் என தொடர்கிறது. இதனால் ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நகைக்கடன் அடகு வைத்தவர்கள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.