கொரோனா பரவல் அதிகரித்தால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்- முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரித்தால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். கொரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக் கொண்ட நிலையில், 2-ம் தடுப்பூசி டோஸை செலுத்திக் கொள்வதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு, 2-ம் தடுப்பூசி டோஸ் முதல்வருக்கு செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பேசுகையில், தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 95.31 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. 20 லட்சம் தடுப்பூசிகள் உட்பட சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், தயார் நிலையில் இருக்கிறது. அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை மக்கள் பின்பற்றினாலே முழு ஊரடங்கு வராது.
கொரோனா பரவல் அதிகரித்தால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்