குழந்தைகளுக்கு அனுமதி இல்லை - பிரபல உணவகம் அதிரடி முடிவு
10 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை அனுமதிக்கமாட்டோம் என பிரபல உணவகம் ஒன்ரு அறிவித்துள்ளது.
not allowed
நியு ஜெர்சி மாகாணத்திலுள்ள ஒரு உணவகம் இனி 10 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை அழைத்து வர அனுமதியில்லை என்று கூறியுள்ளது. வரும் மார்ச் 8 முதல் நியூ ஜெர்சியில் அமைந்திருக்கும் நெட்டிஸ் ஹவுஸ் ஆஃப் ஸ்பெகட்டி என்ற உணவகத்தில் தான் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் அதிகமாக சத்தமிடுவது, குறும்புத்தனம் செய்து மற்றவரை சங்கடத்திற்கு உள்ளாக்குவது, இடம் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உணவகம் தெரிவித்திருக்கிறது.
உணவகம் முடிவு
”எங்களுக்கும் குழந்தைகளை பிடிக்கும். ஆனால், உணவகத்திற்கு வரும் எந்தவொரு வாடிக்கையாளரும் மன நிறைவுடன் திரும்பவேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்துகொள்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள்.

அதனால் தான் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது.” என்று உணவகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நடவடிக்கைக்கு ஆதரவு, எதிர்ப்பு என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.