கொரோனா பரவாமல் இருக்க புது ஐடியாவா? - என்னென்ன சொல்றான் பாருங்க...

covid19protection japanrestaurant
By Petchi Avudaiappan Oct 22, 2021 07:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஜப்பானில் செயல்படும் ஹோட்டல் ஒன்று கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பாரம்பரியமுறையில் குவிமாடம் அமைத்திருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று ஹோட்டல் தொழிலை கடுமையான பாதிப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக சாலையோர உணவகங்களை நடத்தி வந்தவர்கள்கொரோனா நெருக்கடியால் பொருளாதார இழப்பை சந்தித்து வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர்.

பெரும் ஹோட்டல்களும் மீண்டும் வாடிக்கையாளர்களை கவர  புதிய டெக்னிக்குகளை புகுத்து வருகின்றனர். மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அடைக்கப்பட்ட தனி மேஜைகள், தனித் தனி அறைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அந்த வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள செயின் ஹோஷினோயா என்ற உணவகம் ஒன்று டைனிங் டேபிள் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் விதமாக பாரம்பரிய முறையில் சில நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி, ரெஸ்டாரண்டில் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதாவது  பாரம்பரியமாக இருந்த மூங்கில் வினைல்கள் மூலம் உருவாக்கப்படும் குவிமாடத்தில் மிகப்பெரிய விளக்கை வைத்து பாதுகாப்பு அம்சத்தை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மூங்கில் விளக்கு குவிமாடமும் 102 மீட்டர் உயரமும், 75 சென்டி மீட்டர் விட்டமும் கொண்டவை.

சிறந்த ஒலி மற்றும் கைவினைப் பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த குவிமாடம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியாக இருக்கும். எதிரெதிரே இருப்பவர்களையும் நம்மால் பார்த்துக்கொண்டு வழக்கம்போல் உரையாடியவாறு சாப்பிடலாம். அதேநேரத்தில், இந்த குவிமாடம் மற்றும் லைட் போதுமான பாதுகாப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இது அந்த உணவகத்துக்கு பெரும் மதிப்பையும், விளம்பரத்தையும் தேடி தந்துள்ளது.