ஸ்டாலின் கொடுத்த Assignment...டெல்லிக்கு தயாராகும் திமுக MP'க்கள்...என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றம்..?

M K Stalin Smt M. K. Kanimozhi DMK Durai Murugan Chief Minister of Tamil Nadu
By Karthick Sep 16, 2023 08:30 AM GMT
Report

இன்று நடைபெற்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்

வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது நிகழ்ச்சி நிரல் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

resolutions-passed-in-dmk-meeting-happened-today

ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அறிவிப்புகள் இடம்பெறலாம் என அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக எம்.பி'க்கள் கூட்டம்

இந்நிலையில், இதற்கு முன்னதாக இன்று சென்னை முரசொலி மாறன் அரங்களில் திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரகள் கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு,கனிமொழி, ஆ.ராசா உளப்பட பலரும் பங்கெடுத்து கொண்டனர்.

இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை வருமாறு,

* மகளிருக்காக உரிமை தொகை திட்டத்தை துவங்கி வைத்த முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

{

* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் - முற்றிலும் தோல்வியுற்ற மத்திய பாஜக அரசை, நாடாளுமன்றத்தில் "I.N.D.I.A" கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்திய ஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. * மத்திய பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட "விஸ்வகர்மா யோஜானா" திட்டம், குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள்.

* எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த மத்திய பாஜக அரசு, தற்போது I.N.D.I.A கூட்டணிக்கு அஞ்சி "பாரத்" என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது.

resolutions-passed-in-dmk-meeting-happened-today

* பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றமே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மசோதாவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த பிறகும், மத்திய அரசு அந்த மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு செய்து வரும் மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும்.

* இச்சிறப்பு கூட்டத்தொடரில், "மண்டல கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசின் துறைகளில் முழு ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்", "அரசுதுறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

"தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்", "பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள க்ரீமிலேயரை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும்", "உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளோடு "இடஒதுக்கீட்டிற்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்படும்" மசோதாவையும் இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

resolutions-passed-in-dmk-meeting-happened-today

* காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளை பொருட்படுத்தாமல், மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்திட வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.