ஆளுநருக்கு எதிராக தீர்மானம் - சட்டப்பேரவை கதவுகளை மூடி ஓட்டெடுப்பு நடத்திய அப்பாவு
ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் சட்டப்பேரவை கதவுகளை மூடி ஓட்டெடுப்பு நடத்தினார் சபாநாயகர் அப்பாவு.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக, பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் ரவி, மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் உரையாற்றினார். அப்போது அவர், நீண்ட நாட்கள் கிடப்பில் இருக்கும் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்தும் வெளிநாட்டு நிதிஉதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு தமிழக முதல்வரும் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் இவ்வாறு பொதுவெளியில் கூறுவது, சட்டபூர்வ பதவிகளில் இருப்பவருக்கு அழகல்ல என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு, அவர் உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் குடியரசுத்தலைவருக்கு வலியுறுத்தி, சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை துரைமுருகன் கொண்டு வந்தார்.
இதையடுத்து அப்பாவு சட்டப்பேரவை கதவுகளை மூடி உறுப்பினர்களிடம் தேர்தலை நடத்தினார்.