தமிழை அழிக்க நினைக்​கும் ஆதிக்க மொழி..ஏற்றுக்​கொள்ள மாட்டோம் - முதல்வர் !

M K Stalin Tamil nadu Tamil language
By Vidhya Senthil Mar 26, 2025 02:43 AM GMT
Report

 எந்த காரணத்தை கொண்டும் மும்மொழியை ஏற்றுக்​கொள்ள மாட்டோம் என்று பேரவையில் முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 மும்மொழி

சட்​டப்​பேர​வை​யில் நேற்று இரு​மொழிக் கொள்கை தொடர்​பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்​மானத்​தின் மீது விவாதம் நடந்​தது. எதிர்க்​கட்​சித் துணை தலை​வர் ஆர்​.பி.உதயகு​மார் பேசும்​போது, இரு​மொழி கொள்​கை​யில் அதி​முக உறு​தி​யாக உள்​ளது.

தமிழை அழிக்க நினைக்​கும் ஆதிக்க மொழி..ஏற்றுக்​கொள்ள மாட்டோம் - முதல்வர் ! | Resolution In The Assembly Regarding The Bilingual

அதே​நேரம் கல்விக்கு நிதி வழங்​கு​வ​தில் மத்​திய அரசின் வழி​காட்​டு​தல், நிபந்​தனை​யில் மாநில அரசு தனது உறு​தி​யான நிலைப்​பாட்டை மத்​திய அரசுக்கு தெரி​வித்​துள்​ளதா என்​பதை தெரிவிக்க வேண்​டும்" என்​றார்.

இதையடுத்து தீர்​மானத்​துக்கு பதிலளித்து பேசிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்எந்த மொழிக்​கும் எதி​ரானவர்​கள் அல்ல நாம். இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்​பவர்​கள் நாம். யார் எந்த மொழியைக் கற்​ப​தற்​கும் தடை​யாக நிற்​ப​தில்​லை.

அதே நேரத்​தில், தாய்​மொழி​யாம் தமிழை அழிக்க நினைக்​கும் ஆதிக்க மொழி எது​வாக இருந்​தா​லும் அதை அனு​ம​திப்​ப​தில்​லை. இன்​னொரு மொழியை திணிக்க அனு​ம​தித்​தால்,

அது நம் மொழியை மென்று தின்று விடும் என்​பதை நாம் வரலாற்​றுப் பூர்​வ​மாக உணர்ந்​தவர்​கள் என்ற அடிப்​படை​யில்​தான் இரு​மொழிக் கொள்​கையை கடைப்பிடிக்​கிறோம் என்று தெரிவித்துள்ளார்.