பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் - தேசிய அளவில் ட்ரெண்டாகும் #ResignModi

Corona Modi Mamata Banerjee Tirumavalavan
By mohanelango Apr 19, 2021 07:14 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா பேரிடர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. புதிய பாதிப்புகள் மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

ஆனால் அதே சமயத்தில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரம் மற்றும் பேரணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் - தேசிய அளவில் ட்ரெண்டாகும் #ResignModi | Resign Modi Trends Nationally Amid Covid Surge

இதனைத் தொடர்ந்து கொரோனா பரவலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இதே கருத்தை விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் தேசிய அளவில் #ResignModi என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.