அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது - மத்திய அரசு தகவல்
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டால் மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.இதனை தவிர்க்க அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5% உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு நிறைவேற்றியிருந்தது.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 10% இடஒதுக்கீட்டை புதுச்சேரி அரசு அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் இதற்கு புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்குள்ளாக நாராயணசாமி அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி அரசின் மசோதாவை நிராகரித்துவிட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.