கொரோனா பரவலுக்கு காரணம் இந்த விலங்குதான் : அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மருத்துவக் குழு

COVID-19
By Irumporai Mar 17, 2023 09:05 AM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

கொரோனா வைரஸ் உருவானதுகுறித்த அதிர்ச்சி தகவலை சர்வதேச நிபுணர் குழு வெளியிட்டுள்ளது.

 கொரோனா சீனா

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 ஆண்டில் உலகையே முடக்கியது , தற்போது பெரும் முயற்சிகளுக்கு பிறகு மெல்ல கொரோனா குறைந்த நிலையில் தற்போதும் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து நிபுணர்கள் குழு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பரவலுக்கு காரணம் இந்த விலங்குதான் : அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மருத்துவக் குழு | Research Says Raccoon Reason For Spread Corona

 ரக்கூன் காரணம்

முன்னதாக அமெரிக்க நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தியபோது வூகான் விலங்குகள் சந்தையிலிரிந்து கொரோனா பரவியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் . தற்போது சர்வதேச நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வில் சீனாவின் வூகான் சந்தையில் உள்ள ரக்கூன் நாய் வகையிலிருந்து கொரோனா தொற்று தொடங்கியதற்கான மரபணு சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.

சீனாவின் வூகான் சந்தையில் ரக்கூன் நாய்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், அந்நாய்களிடமிருந்து இந்த தொற்று பரவியிருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது இந்த தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.