புத்தாண்டில் அடுத்த சாதனையை படைக்கும் ISRO - நாளை விண்ணில் பாய்கிறது ராக்கெட்!

India Indian Space Research Organisation World ISRO
By Jiyath Dec 31, 2023 09:10 AM GMT
Report

நாளை காலை 9.10 மணிக்கு XPoSAT உள்ளிட்ட 10 சாட்லைட்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ.

இஸ்ரோ (ISRO)

விண்வெளித்துறையில் மகத்தான சாதனைகளை இந்தியாவின் இஸ்ரோ (ISRO) படைத்து வருகிறது. இந்த ஆண்டில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கியது.

புத்தாண்டில் அடுத்த சாதனையை படைக்கும் ISRO - நாளை விண்ணில் பாய்கிறது ராக்கெட்! | Research About Black Holes Xposat Isro

இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. மேலும் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தையும் கடந்த செப்டம்பர் மாதம் வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் ஏவியது.

இந்நிலையில் புத்தாண்டான நாளை ஜனவரி 1ம் தேதி, கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மர்மங்கள் குறித்து ஆய்வு செய்யும் எக்ஸ்போசாட் (XPoSAT) என்ற சாட்டிலைட்டை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ.

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

அடுத்த சாதனை 

மிகப் பெரிய நட்சத்திரங்கள் அதன் எரிபொருள் காலியாகும் போது, அவை கருந்துளைகள் அல்லது நியூட்ரான் நட்சத்திரங்களை உருவாக்கும்.

புத்தாண்டில் அடுத்த சாதனையை படைக்கும் ISRO - நாளை விண்ணில் பாய்கிறது ராக்கெட்! | Research About Black Holes Xposat Isro

இதுபோன்ற இறந்த நட்சத்திரங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ வடிவமைத்ததே இந்த XPoSAT சாட்டிலைட் ஆகும். மேலும், எக்ஸ்ரே ஃபோட்டான்கள் மூலம் கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் அருகே உள்ள கதிர்வீச்சுகளை ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும்.

இந்த சாட்டிலைட்டின் மதிப்பு ரூ 250 கோடி ஆகும். இது உண்மையில் மிகக்குறைந்த செலவாகும். ஏனெனில் கிட்டத்தட்ட இதே பணிக்காக அமெரிக்காவின் நாசா IXPE என்ற சாட்டிலைட்டை அனுப்பியிருந்தது. அதன் மதிப்பு ரூ.1500 கோடியாகும்.

நாளை காலை சரியாக 9.10 மணிக்கு இந்த XPoSAT உள்ளிட்ட 10 சாட்லைட்கள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் பாய உள்ளது. இதற்கான கவுண் டவுன் தற்போ தொடங்கப்பட்டுள்ளது.