வெளி நாட்டிற்கு கடத்த முயன்ற நடராஜர் உலோகச் சிலை மீட்பு

By Irumporai Nov 07, 2022 10:33 AM GMT
Report

சென்னை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்தமுரளி மற்றும் காவல் துறை தலைவர் தினகரன் ஆகியோர் உத்திரவிட்டதன் பேரில் சிலை திருட்டு தடுப்புப்பிரிவு திருச்சி கூடுதல் சரக காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ராஜேஸ் .பிரோமாசாந்தகுமாரி , சார்பு ஆய்வாளர்கள் பாண்டியராஜன் , தலைமை காவலர் பரமசிவம் மற்றும் சிவபாலன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் ஆயுவு மேற்கொண்டனர்.

கோவையில் ஆய்வு

கோயம்புத்தூர் சென்று தகவலாளி சிலை மூலமாக பேசி சிலையை வாங்குபவர்கள் போன்று கோயம்புத்தூர் கொண்டு வருமாறு கூறி அதன்படி நேற்று 06- ம் தேதி அதிகாலை 05.00 மணியளவில் கோவையிலிருந்து பல்லடம் செல்லும் மெயின்ரோட்டில்

இருகூர் பிரிவில் காத்திருந்த போது KL 08 BV 8040 ஹூண்டாய் கிரீட்டா காரில் வந்தவர்களை போலீஸார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில்

காரை ஓட்டிவந்தவர் ஜெயந்த் வயது -22 , மற்றொரு நபர் பெயர் சிவபிரசாத் நம்பூதிரி வயது -53 . மேற்படி காரை சோதனை செய்த போது காரின் டிக்கியில் வெள்ளை நிற சாக்கு பையில் சுருட்டிய நிலையில் சுமார் 3 - அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச்சிலையை மறைத்து வைத்திருந்திருந்தது தெரியவந்தது .

வெளி நாட்டிற்கு கடத்த முயன்ற நடராஜர் உலோகச் சிலை மீட்பு | Rescue Of Metal Statue Of Nataraja Foreign Country

இதுகுறித்து அவர்களிடம் விசாரித்த போது அருள்மிகு நடராஜர் சிலையை காரில் கொண்டு வந்ததற்கு தக்க முகாந்திரம் கூறாமல் சந்தேகப்படும்படியாக முன்னுக்கு பின் முரணாக கூறியதால் சந்தேகத்தின் அடிப்படையில் திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச்சிலை மற்றும் சிலையை கொண்டு வந்த KL 08 BV 8040 ஹூண்டாய் கிரீட்டா காரையும் கைப்பற்றி காவல் ஆய்வாளர் பிரேமாசாந்தகுமாரி கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

கும்பகோணத்தில் ஆஜார்

கைப்பற்றப்பட்ட சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டள்ளது . மேலும் சிலையை மீட்ட காவலர்களின் பணியை பாராட்டி காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சிலைகள் கடத்த முயற்சி செய்வது தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக இந்த வருடம் இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

105 உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 42 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தற்போது அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால் புகாரின் அடிப்படையில் கூடுதலாக சிலை கடத்தல் வழக்குகள் கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.