இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி போட்டோவை சேர்க்க கோரிக்கை
Money
By Thahir
ரூபாய் நோட்டில் காந்தி புகைப்படத்திற்கு பதில் நேதாஜி புகைப்படத்தை சேர்க்க வேண்டும் என இந்து மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் தற்போது காந்தியின் புகைப்படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தை மாற்ற வேண்டும் என்றும் இந்திய ரூபாய் நோட்டில் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்தை வைக்க வேண்டும் என்றும் அகில பாரத இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய நாட்டின் விடுதலைக்கான நேதாஜியின் பங்களிப்பு எந்த விதத்திலும் காந்திஜியின் பங்களிப்பைவிட குறைவாக இல்லை என்றும் இந்து மகா சபை தெரிவித்துள்ளது.