குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
M K Stalin
India's Republic Day
R. N. Ravi
Governor of Tamil Nadu
By Yashini
இந்தியா முழுவதும் இன்று 77வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
நாட்டின் 77ஆவது குடியரசுத் தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றினார்.
ஆளுநராக அவர் 5ஆவது முறையாக கொடியேற்றிய பிறகு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

அதனைத்தொடர்ந்து ராணுவம், கடற்படை, வான்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
ஏவுகணைகள், பீரங்கிகள் போன்ற ஆயுதங்கள் ஏந்திய ராணுவ வாகனங்களும் அணிவகுத்துச் சென்றன.
இந்நிகழ்விற்கு வந்த ஆளுநரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.