ராகுல் காந்திக்கு மூன்றாவது வரிசை: மீண்டும் சர்ச்சை?
டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
குடியரசு தின விழா
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது, தமிழகத்தில் ஆளுநர் ரவி கொடியேற்றிவைத்தார், டெல்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடியேற்றினார்.
தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அணிவகுப்புகள், ராணுவ வுீரர்களின் சாகசங்கள் அடங்கிய நிகழ்வுகள் நடைபெறும்.
மூன்றாவது வரிசை
இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு மூன்றாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு வரிசைகளில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அமர்ந்துள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த விழாவில் ஒலிம்பிக் வீரர்களுக்கு மத்தியில் இடம்கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது, கடந்தாண்டு நடந்த விழாவில் ராகுல்காந்தி கலந்துகொள்ளவில்லை, இந்த ஆண்டும் மீண்டும் பின்வரிசையில் இடம் கொடுக்கப்பட்டிருப்பதால் சர்ச்சையாகியுள்ளது.
