தமிழகத்தின் குடியரசு தின அலங்கார ஊர்தி : பாஜக வரவேற்பு

tamilnadu bjp annamalai welcome repuplicday ornamentalvehilcle
6 மாதங்கள் முன்

தமிழகத்தின் குடியரசு தின அலங்கார ஊர்தி மாநிலம் முழுவதும் செல்வதை பாஜக வரவேற்கிறது என்று தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து, தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் என்றும், இந்த ஊர்தி தமிழகம் முழுவதும் செல்லும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

. இதனையடுத்து, தமிழகத்தின் குடியரசு தின அலங்கார ஊர்தி மாநிலம் முழுவதும் செல்வதை பாஜக வரவேற்கிறது என்று தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.