முடிவுக்கு வந்த சர்ச்சை ? - ஒரே மேடையில் சிரித்து பேசிக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்,என்.ரவி

M K Stalin R. N. Ravi
By Irumporai Jan 26, 2023 03:29 AM GMT
Report

குடியரசு தின விழாவின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியினை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து ரசித்தனர்.

 குடியரசுதின விழா

நாட்டின் 74-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

அவரின் காரின் முன்னும்பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார்.

ஒரேமேடையில் ஆளுநர் முதலமைச்சர்

இதனை தொடர்ந்து காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். பின்னர், 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார்.

முடிவுக்கு வந்த சர்ச்சை ? - ஒரே மேடையில் சிரித்து பேசிக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்,என்.ரவி | Republic Day Governor Rn Ravi Cm Stalin

பின்னர் அதிகாரிகளை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றினார்.

முடிவுக்கு வந்த சர்ச்சை ? - ஒரே மேடையில் சிரித்து பேசிக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்,என்.ரவி | Republic Day Governor Rn Ravi Cm Stalin

அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. பின்னர் ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர்.

அதன் பிறகு நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சியினை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஒன்றாகா அமர்ந்து இருவரும் சிரித்தப்படி , பேசியபடி மாணவர்களின் நிகழ்ச்சிகளை ரசித்தனர்.

முடிவுக்கு வந்த சர்ச்சை ? - ஒரே மேடையில் சிரித்து பேசிக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்,என்.ரவி | Republic Day Governor Rn Ravi Cm Stalin

கடந்த சில நாட்களாக ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக அமர்ந்து ரசித்ததுள்ளனர். குறிப்பாக ஆளுநர் ரவி இன்றைய உரையில் தமிழ்நாடு என குறிப்பிடிருந்தது இங்கு கவனிக்க தக்கது

முடிவுக்கு வந்த சர்ச்சை ? - ஒரே மேடையில் சிரித்து பேசிக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்,என்.ரவி | Republic Day Governor Rn Ravi Cm Stalin