குடியரசு தின விழாவில் பிரதமர் அணிந்திருந்த தலைப்பாகையை கவனிச்சிங்களா : எந்த ஊரை சேர்ந்தது ?

BJP Narendra Modi
By Irumporai Jan 26, 2023 09:02 AM GMT
Report

பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது விதவிதமான தலைப்பாகை அணிவை வழக்கமாக கொண்டுள்ளார்.

  பிரதமர் மோடி உடை

இந்தாண்டு குடியரசு தின விழாவில், பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார். துண்டு ஒன்றையும் அணிந்திருந்தார்.

 தற்போதைய தலைப்பாகை

தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற மோடி, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பிறகு குடியரசு தின கொண்டாட்டத்திலும் பங்கேற்றார். குடியரசு தின விழா நிறைவடைந்த பிறகு கார் கதவை திறந்து கொண்டு நின்றபடி பார்வையாளர்களை நோக்கி இரு கைகளையும் அசைவத்தவாறே சென்றார்.

 கடந்த ஆண்டு, பிரதமர் மோடியின் உடையில் உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரின் தனித்துவமான தலைப்பாகை இருந்தது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியின் உடைகள் மிகவும் தனித்துவமாக அமைந்து இருக்கின்றன. கடந்த 9 ஆண்டுகளாக அவர் இதுபோன்று தனித்துவமான உடைகளையே சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களின் போது அணிகின்றார்.

இன்று நாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி, இந்தியாவின் பன்முகத்தன்மையை குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பல வண்ண ராஜஸ்தான் தலைப்பாதை அணிந்து பங்கேற்றார்.