பத்திரிகையாளர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை உயர்வு... முதல்வருக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் நன்றி...
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய முதலமைச்சராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி செய்தி சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சமும், ஊக்கத்தொகை ரூ.5 அப்பா ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என இன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜெ. சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் டி.இளையராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.இராம்ஜி ஆகியோர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில் பத்திரிகையாளர்களுக்கான கொரோனா நிவாரண தொகை மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்கியிருப்பது
மகிழ்ச்சியாகவும், பத்திரிகையாளர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பேருதவியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என தெரிவித்துள்ளனர்.