ஆணுறையை வைத்து மைக்கை பாதுகாத்த செய்தியாளர் - எப்படிமா இப்படிலாம்!

Viral Video Florida California
By Sumathi Oct 01, 2022 01:55 PM GMT
Report

ஆணுறையை வைத்து மழையிலிருந்து மைக்கை செய்தியாளர் ஒருவர் பாதுகாத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

 இயன் சூறாவளி

அமெரிக்காவின் ஃப்ளோரிடா, கலிபோர்னியா உள்ளிட்ட மாகணங்களை இயன் சூறாவளி தாக்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், பல வீடுகள் மற்றும் கார்கள் பெரும் சேதமடைந்தன.

ஆணுறையை வைத்து மைக்கை பாதுகாத்த செய்தியாளர் - எப்படிமா இப்படிலாம்! | Reporter Uses Condom To Protect Mic

மேலும், கனமழை பெய்து வருவதால் சூறாவளி வலுவடைந்து வருகிறது என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளிலிருந்து தொடர்ந்து செய்திகளை வழங்குவதற்காக பல சர்வதேச ஊடகங்கள் முயன்று வருகின்றன.

ஆணுறை - மைக்

இதில், செய்தியாளர் கைலா காலர் என்பவர் புயல் பாதித்த பகுதியிலிருந்த மக்களுடன் உரையாடி செய்திகளை வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. அதனால், மைக் சேதமாகாமல் இருக்க கைலா ஆணுறையைப் பயன்படுத்தி அதனை மூடியிருந்தார்.

தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் மைக்கில் வித்தியாசமாக இருப்பது என்னவென்று கேட்க, "அது சாதாரண ஆணுறை தான். மைக் மழை நீரால் சேதாரம் ஆக வாய்ப்பிருக்கிறது" என்று கைலா பதிலளித்துள்ளார்.