குற்றம் சுமத்திய பத்திரிகையாளர் - கூலாக பதிலளித்த விராட் கோலி: வைரலாகும் வீடியோ
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சமீபத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்தது. முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது.
சமீபத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியடைந்தது.
இந்தப் போட்டி முடிந்தவுடன் பத்திரிகையாளர் மத்தியில் விராட்கோலி இந்த ஆட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்த நிலையில், ஒரு பத்திரிக்கையாளர் விராட் கோலியை வழிமறித்து ஒரு சில விஷயங்களை கூறினார்.
ஆட்டம் குறித்து விராட் கோலி மிக சீரியஸாக பேசி கொண்டிருந்த வேளையில் அவரை வழிமறித்த அந்த பத்திரிகை நிருபர், இந்திய அணி நிறைய ரன்களை குவிக்க தவறுகிறது அதன் காரணமாகவே இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததாகவும் அந்த தவறை இனி வரும் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் உணர்ந்து விளையாட வேண்டும் என்று அவர் கூறினார்.
அவர் கூறியதை பொறுமையாக முழுமையாக கேட்டு முடித்த விராட் கோலி எந்தவித யோசனையும் இன்றி சரி உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி என்று பதில் அளித்தார். அவர் பதில் அளித்த இந்த விதம் சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் இந்திய ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இரண்டு அணிகளும் ஒரு வெற்றி பெற்ற நிலையில், தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
4வது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்ற விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.