தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வருகிற 5ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், 6 ஆம் தேதி அன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த இரு நாட்களில் உள் மாவட்டங்களில் சுமார் 6 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை உயருமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.