தவெக தனித்தே போட்டி - விஜய் போட்டியிட உள்ள தொகுதி இதுவா?

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Mar 17, 2026 06:34 AM GMT
Report

தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ள தொகுதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தனித்தே போட்டியிடும் தவெக

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

தவெக தனித்தே போட்டி - விஜய் போட்டியிட உள்ள தொகுதி இதுவா? | Report Says Tvk Vijay To Contest In Perambur

தனது முதல் தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜயின் தமிழக வெற்றி கழகத்தை, அதிமுக கூட்டணியில் இணைக்க ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது மற்றும் கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாஜக அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியானது. 

விஜய் எங்கள் கூட்டணிக்கு வராவிட்டால்... ஜெயக்குமார் கொடுத்த பதில்

விஜய் எங்கள் கூட்டணிக்கு வராவிட்டால்... ஜெயக்குமார் கொடுத்த பதில்

விஜய் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு தவெக தரப்பில் இருந்து மறுப்பு வெளியாகியுள்ளது. 

விஜய் போட்டியிட உள்ள தொகுதி

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் முதற்கட்ட வேட்பாளர் தேர்வு நேர்காணலை முடித்துள்ள நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் 2ஆம் கட்ட வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

தவெக தனித்தே போட்டி - விஜய் போட்டியிட உள்ள தொகுதி இதுவா? | Report Says Tvk Vijay To Contest In Perambur

பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், "நாம் தனித்தே போட்டியிட போகிறோம். வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். கண்டிப்பாக வெற்றி பெறுவோம்" என பேசியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், பொதுச்செயலாளர் ஆனந்த் திநகர் தொகுதியிலும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா போட்டியிட தகவல் வெளியாகியுள்ளது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.