இந்தியாவில் கள்ளக்காதல் அதிக உள்ள நகர பட்டியல் - முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு நகரம்

Kanchipuram India
By Karthikraja Jul 24, 2025 10:20 AM GMT
Report

இந்தியாவில் கள்ளக்காதல் அதிக உள்ள நகர பட்டியலில், தமிழ்நாடு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

கள்ளக்காதல்

உலகளவில் ஆண் பெண் பேதமின்றி, பலரும் தங்களது வாழ்க்கை துணைக்கு தெரியாமல் மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளனர். இந்தியாவிலும், கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

கள்ளக்காதல்

கள்ளக்காதல் என்னும் துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட நபர் உயிரை மாய்த்து கொள்வதும், துணையின் உயிரை பறிப்பதும் நிகழ்கிறது.

இந்நிலையில், திருமணத்திற்கான டேட்டிங் செயலியான Ashley Madison, இந்தியாவில் கள்ளக்காதல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் முதலிடம்

இதில், முதல் இடத்தில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் உள்ளது. 2024 ஆம் ஆண்டில், 17வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் இந்த ஆண்டு முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது. 

காஞ்சிபுரம் கள்ளக்காதல் - kanchipuram extra marital affair

2 வது இடத்தில் மத்திய டெல்லியும், குர்கான் 3வது இடத்திலும், கௌதம் புத்த நகர் (நொய்டா) 4வது இடத்திலும், தென்மேற்கு டெல்லி 5வது இடத்திலும் உள்ளது.

டேராடூன் 6வது இடத்திலும், கிழக்கு டெல்லி 7 வது இடத்திலும், புனே 8 வது இடத்திலும், பெங்களூர் 9 வது இடத்திலும், தெற்கு டெல்லி 10 வது இடத்திலும் உள்ளது. 

bengaluru extra marital affair

லக்னோ 12வது இடத்திலும், கொல்கத்தா 13வது இடத்திலும், ஹைதராபாத் 18வது இடத்திலும் உள்ளன. மும்பை இந்த பட்டியலில், முதல் 20 இடங்களில் வரவில்லை.

முன்னதாக, ஆஷ்லே மேடிசன் வெளியிட்ட YouGov கணக்கெடுப்பில், பதிலளித்த 53% இந்தியர்கள் தங்கள் துணையை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டனர்.

உலகளவில், கள்ளக்காதலில் இந்தியா 6வது இடத்தில் உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இது மேலே உயரும் என ஆஷ்லே மேடிசனின் தலைமை மூலோபாய அதிகாரி பால் கீபிள் தெரிவித்துள்ளார்.