இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நாளை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது : சபாநாயகர் தகவல்

M. Appavu
By Irumporai Oct 17, 2022 06:03 AM GMT
Report

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் நாளை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நிலையில், மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நாளை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது : சபாநாயகர் தகவல் | Report On Hindi Be Filed Tomorrow Speaker

அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பாவு தகவல்

இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் நாளை சட்டப்பேரவையில் வைக்கப்படும்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நாளை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக இ.பி.எஸ் தரப்பில் 4 கடிதங்களும் ஓ.பி.எஸ் தரப்பில் 2 கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் பதிலளிக்க விரும்பவில்லை. சட்டப்பேரவையில் இது குறித்து விளக்கம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.