ரெப்போ வட்டி விகிதம் குறைவு - வீட்டு லோன், கார் லோன் நிலவரம்

India Reserve Bank of India
By Sumathi Dec 05, 2025 07:20 AM GMT
Report

ரெப்போ விகிதம் 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது.

ரெப்போ விகிதம்

அடுத்த இரண்டு மாதங்களில் (ஏப்ரல்) அது மேலும் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது.

repo rate

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 0.50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

வட்டி குறைவு

தற்போது வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.

ரெப்போ வட்டி விகிதம் குறைவு - வீட்டு லோன், கார் லோன் நிலவரம் | Repo Rate Down Home Loan Car Loan Emi

இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.50%இல் இருந்து தற்போது 5.25%ஆக குறைந்துள்ளது. ரெப்போ ரேட் என்பது இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு கடன் வழங்கும் வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.