கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்வு - ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தியது ரிசர்வ் வங்கி.
ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% (50 basis points) உயர்த்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
அதன்படி ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் 7% ஆக நீடிக்கும் சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்த 4-வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி. 2022 மே முதல் செப்டமபர் வரை ரெப்போ வட்டி விகிதம் 1.4% உயர்த்தப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதமும் உயரும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஸ்டாண்டிங் டெபாசிட் வசதி (SDF) விகிதம் 5.65% மற்றும் MSF (விளிம்பு நிலை வசதி) & வங்கி விகிதம் 6.15% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்துள்ளார்.