முதல்ல அந்த பையனுக்கு சான்ஸ் கொடுங்க ... கவாஸ்கர் குறிப்பிடும் இந்திய வீரர் யார் தெரியுமா?
நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்படும் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது. அடுத்ததாக வரும் 31 ஆம் தேதி நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தான தங்களது கருத்துக்களை முனனாள் வீரர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா பந்துவீசமாட்டார் என்றால், அவருக்கு பதிலாக அபாரமான ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனை ஆடவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை சேர்த்தால் எதிரணிக்கு பயம் காட்டுவதாக அமையும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
