சீரமைப்போம் தமிழகத்தை: டிரெண்டாகும் கமல்ஹாசனுக்கு ஆதரவான ஹேஷ்டேக்குகள்

kamal twitter hashtag
By Jon Mar 12, 2021 04:47 PM GMT
Report

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதிமுக- திமுக நேரடி மோதல், முக்கிய அரசியல் பிரபலங்கள், நட்சத்திரங்கள் போட்டியிடும் தொகுதிகள் ஏறக்குறைய அறிவிக்கப்பட்டு விட்டது, வேட்பு மனுதாக்கலும் இன்று தொடங்கிவிட்டது.

இன்று மக்கள் நீதி மய்யத்தின் 2ம் கட்ட வேட்பாளர் அறிவிப்பு வெளியானது, இதில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார், முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்குகிறார்.

இந்த அறிவிப்பு வெளியான நிமிடத்திலிருந்து டுவிட்டரில் கமலுக்கு ஆதரவாக #CoimbatoreSouth #கோவைதெற்கு போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. அந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து கமல்ஹாசன் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.