6,7,8ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்க தமிழக அரசு விரைவில் முடிவு

covid university student
By Jon Feb 11, 2021 01:05 PM GMT
Report

6,7,8ம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி 9 முதல் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாட திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையால் குறைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் பொதுத் தேர்வில் மாணவர்களும் , பெற்றோர்களும் விரும்பும் வகையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.  

6,7,8ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்க தமிழக அரசு விரைவில் முடிவு | Reopen Date School Day Tamilnadu

இந்நிலையில் தமிழகத்தில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. 6, 7, 8ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. 2020–21ம் கல்வி ஆண்டிற்கான மூன்று பருவத்திற்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட பின்னரே 9 ,10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் விரைவில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிக்கும் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.