வாடகைக்கு விடப்படும் கணவன்கள்;இதுதான் விஷயமா? எங்கே தெரியுமா?
வாடகைக்கு விடப்படும் கணவன் என்ற சேவை பிரபலமாகி வருகிறது.
Husband 4 Hire
இங்கிலாந்தில் "வாடகைக்கு விடப்படும் கணவன்" என்ற சேவை நீண்ட காலமாக செயல்பாட்டில் இருக்கிறது. "Husband 4 Hire", "Hire A Hubby" என்ற பெயர்களில் இந்தச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பிரிட்டனில் செயல்பட்டு வருகின்றன.

வீட்டில் பொதுவாகக் கணவர்கள் செய்யும் வேலைகளைச் செய்து முடிப்பதற்காக ஒரு திறமையான நபரைக் கட்டணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தும் சேவைக்குத்தான் "வாடகைக்கு விடப்படும் கணவன்" என்று பெயராம். ஆனால் வெளியில் இதுபற்றி சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.
வீடுகளில் அல்லது அலுவலகங்களில் செய்ய வேண்டிய சின்ன சின்ன பழுதுபார்க்கும் வேலைகள் சீரமைப்புப் பணிகள், பர்னிச்சர் பொருட்களை இணைத்தல், பெயிண்டிங், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் போன்ற வேலைகளைச் செய்வதற்காக இந்தச் சேவை பயன்படுத்தப்படுகிறது.
உண்மை என்ன?
தனிமையில் இருக்கும் பெண்கள், மிகவும் பிஸியாக இருக்கும் தம்பதிகள் அல்லது இந்த வேலைகளைச் செய்யத் திறமை இல்லாதவர்கள் இவர்களை வேலைக்கு அமர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். வேலைக்கு ஆகும் நேரத்தைப் பொறுத்து (மணிநேரம் அல்லது நாள் முழுவதும்) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சேவைக்கும், வாடகைக்கு கணவன்கள் என்ற பெயரை பயன்படுத்தப்படுவதற்கு காரணம், பாரம்பரியமாக மேற்கத்திய கலாச்சாரத்தில், வீடுகளில் உள்ள மின்சாரம், குழாய்கள், பழுதுபார்ப்பு போன்ற வேலைகளைப் பெரும்பாலும் வீட்டில் உள்ள ஆண் (கணவன்) கவனித்துக் கொள்வார் என்ற பொதுவான எண்ணம்தான்.