வாடகைக்கு விடப்படும் மனைவிகள் - முண்டியடிக்கும் சுற்றுலா வாசிகள்!
மனைவிகளை வாடகைக்கு விடும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
வாடகை மனைவி
தாய்லாந்தில் வேகமான வாழ்க்கை முறை, தனிமை காரணமாக வாடகை மனைவிகள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
வாடகை மனைவியின் விலை 1600 டாலர்கள் முதல் 1 லட்சத்து 16 ஆயிரம் டாலர்கள் வரை (அதாவது 1.4 லட்சம் முதல் 1 கோடிக்கு மேல்) இருக்கலாம். ஒரு பெரிய தொழிலாக மாறியுள்ளது. பெண்ணின் வயது, அழகு, கல்வித் தகுதியை பொறுத்து உறவை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பதைப் பார்த்து தீர்மானிக்கப்படுகிறது.
அதிகரிக்கும் போக்கு
அந்தப் பெண் தனது டெம்ப்ட்ரவரி கணவனுடன் உணவு சமைத்து, உல்லாசமாக சுற்றித் திரிந்து, குடும்பம் போன்ற சூழ்நிலையில் வாழ்கிறாள். அவன் அவளையோ, அவள் அவனையோ விரும்பினால் திருமணமும் செய்து கொள்ளலாம்.
‘‘தாய் டேபூ தி ரைஸ் ஆஃப் வைஃப் ரென்டல் இன் மாடர்ன் சொசைட்டி" என்ற புத்தகம் மூலம் இது அம்பலமாகியுள்ளது. எழுத்தாளர் லாவர்ட் இம்மானுவேல் இதுகுறித்து கூறுகையில், ‘‘ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் இந்த வேலையை மேற்கொள்கிறார்கள்.
அவர்களில் பெரும்பாலோர் இரவு விடுதிகள், பார்களில் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைச் சந்திக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போக்கு குறித்து தாய்லாந்து அரசாங்கமும் கவலை தெரிவித்துள்ளது.