ரூ.15,000க்கு வாடகை மனைவிகளாக மாறும் பெண்கள்; கன்னிகளுக்கு முன்னுரிமை - அதுவும் இந்தியாவில்..
வாடகை மனைவி என்கிற முறை இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடகை மனைவி
மத்திய பிரதேசம், சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில் வாடகை மனைவி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. 'தாதிச்சா பிரதா' என்று அழைக்கப்படும்
இந்த முறையில் பெண்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆண்களுக்கு மனைவிகளாக வாடகைக்கு விடப்படுகிறார்கள். திருமணத்துக்கு பெண்கள் கிடைக்காத கிராமத்தின் பணக்கார ஆண்கள் வாடகை மனைவிகளை ஏலம் எடுக்கிறார்கள்.
கன்னித்தன்மை, உடல் தோற்றம் மற்றும் வயது போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஏலம் விடப்படுகிறது. 8 முதல் 15 வயதுக்குட்பட்ட கன்னிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்காக ரூ. 15,000 முதல் 25,000 வரை அந்தப் பெண்களுக்கு பணம் தரப்படுகிறது.
பாலியல் சுரண்டல்
ஏலம் விடும் பெண்களுக்கும் ஏலத்தில் எடுக்கும் ஆண்களுக்கும் இடையே ரூ.10ல் தொடங்கி ரூ.100 வரையிலான பத்திரத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒப்பந்தக் காலத்தின் முடிவில், பெண்கள் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளவும் முடிகிறது.
இதில், 14 வயதில் ரூ.80,000க்கு வாடகை மனைவியாக ஏலம் விடப்பட்ட சிறுமி, தனது துணையாலும், அவரது குடும்பத்தில் உள்ள ஆண்களாலும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். எனவே, இந்த நடைமுறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்து வருகிறது.