கள்ளசந்தையில் ரெம்டெசிவர் மருந்து... கையும்களவுமாக சிக்கிய இளைஞர்!
மதுரையில் ரெம்டெசிவர் மருந்தினை கள்ளசந்தையில் விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தினை மதுரையில் கள்ள சந்தையில் விற்பனை செய்யவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில்மதுரை புதுவிளாங்குடியை சேர்ந்த இர்பான் கான் என்ற இளைஞரை மதுரை மாநகர தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சிகிச்சை மருந்துசீட்டை பயன்படுத்தி முறைகேடாக ரெம்டெசிவர் மருந்தை பெற்று கள்ளசந்தையில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

. மேலும் கைது செய்யப்பட்ட இளைஞருடன் மருத்துவர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலிசார் நடத்திய தீவிர விசாரணையில் .
அரசு மருத்துவக் கல்லூரியில் 1568 ரூபாய்க்கு வாங்கப்படும் மருந்தை
கள்ளச்சந்தையில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.