ரெம்டெசிவிர் மருந்துவ மையங்களில் விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும்- கமல்ஹாசன் ட்வீட்

kamalhasan remtacivir
By Irumporai Apr 28, 2021 11:13 AM GMT
Report

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்திற்கான விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டுமென கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பற்றாக்குறை எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில்: ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் .


 விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என தெரிவித்துள்ளார்.