மோடி வீடியோ நீக்க விவகாரம்: மெட்டா மன்னிப்பு

Narendra Modi Meta Social Media
By Vinoja Aug 06, 2026 05:37 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோவை பேஸ்புக்கில் தற்காலிகமாக நீக்கிய விவகாரத்தில் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்களுக்கு உறுதியளித்து பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ சிறிது நேரம் பேஸ்புக்கில் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளை மத்திய அரசு விளக்கம் கேட்டு அழைத்தது.

மோடி வீடியோ நீக்க விவகாரம்: மெட்டா மன்னிப்பு | Removing Pm Modi Video Meta Apologize

மன்னிப்பு கோரிய மெட்டா

இதையடுத்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் நடைபெற்ற சந்திப்பில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தரப்பில் இருந்து மன்னிப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்கள், டீப்பேக் வீடியோக்கள் மற்றும் இந்திய சட்டங்களுக்கு இணங்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் மத்திய அரசு அதிகாரிகள் மெட்டா நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.