இது போல பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றம் : கனடா நீதிமன்றம் அதிரடி
பாலியல் உறவின்போது இணையரின் அனுமதியின்றி ஆணுறை அணியாததற்கு ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என கனடாவின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் இதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
விசாரணைக்கு வந்த வழக்கு
பிரிட்டன் கொலம்பியா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரோஸ் மெக்கென்சி கிர்க்பாட்ரிக் என்பவர் விடுவிக்கப்பட்டிருந்தார். கிர்க்பாட்ரிகிடம் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பாதுகாப்பான முறையில் பாலியல் உறவு வைத்து கொள்ள சம்மதித்த பெண்ணுடனான உறவின்போது ஆணுறை அணியவில்லை என கிர்க்பாட்ரிக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கவில்லை.
அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதி மன்றம்
உடலுறவின் போது ஆணுறையை ரகசியமாக அகற்றும் செயல், சில சமயங்களில் "stealthing" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் உறவின்போது இணையரின் அனுமதியின்றி ஆணுறை அணியாதவர்களை குற்றவாளி என இந்த இரண்டு நாடுகளிலும் நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ளது