பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டி..அதிர்ந்து போன மருத்துவர்கள் - அறுவை சிகிச்சையில் நடந்த கொடூரம்!
வயிறு வலியால் துடித்த பெண்ணின் வயிற்றிலிருந்த 5 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
திருச்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்குத் திருச்சி ,புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கலா என்ற பெண் வயிற்று வலி ஏற்பட்டுக் கடந்த 20-ம் தேதி மணப்பாறையில் உள்ள காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது.மேலும் இந்த கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இதுதொடர்பாக குடும்பத்தினரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சை
அதன்படி நேற்று (அக்.05) மணப்பாறை காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் தமிழ்மணி மேற்பார்வையில் 6 பேர் கொண்ட மருத்துவக்குழுவானர் அறுவை சிகிச்சை தொடங்கினர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப்பின் பெண்ணின் வயிற்றிலிருந்த 5 கிலோ கட்டியை வெளியே எடுத்து அகற்றினர். இதையடுத்து அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்குப்பின் உள்ள மருத்துவ கண்காணிப்பு அறைக்கு மாற்றப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.