டாட்டூக்கள் ஆபாசமானவை மற்றும் இழிவானவை; 15 நாட்களில் நீக்க வேண்டும்- அதிரடி உத்தரவு!
அதிகாரிகள் உடலிலிருக்கும் டாட்டூக்களை 15 நாட்களில் நீக்க வேண்டும் என காவல்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
டாட்டூக்கள் நீக்க வேண்டும்
ஒடிசா மாநிலத்தின் சிறப்பு பாதுகாப்பு பட்டாலியன் அதிகாரிகள் மாநில உயர் நீதிமன்றம், முதல்வர் இல்லம், ராஜ் பவன், தலைமைச் செயலகம், சட்டமன்றம் ஆகிய முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சுழலில் அண்மை காலமாக சில முக்கிய நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு இருந்த பட்டாலியன் அதிகாரிகள் உடம்பில் டாட்டூ இருந்துள்ளது.இதை கண்ட சில காவல் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக குற்றசாட்டை முன்வைத்தனர்.
இதையடுத்து, அதிகாரிகள், தங்கள் உடலிலிருக்கும் டாட்டூக்களை 15 நாள்களுக்குள் நீக்க வேண்டும் என்று ஒடிசா காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து பேசிய ஒடிசா காவல்துறை துணை ஆணையர், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஆண் அதிகாரிகள் தங்களின் உடலில் டாட்டூ போட்டிருப்பதைக் காண முடிகிறது.
அதிரடி உத்தரவு
இது பட்டாலியன் மற்றும் ஒடிசா காவல்துறையின் இமேஜை இழிவுபடுத்துகிறது. ஏனெனில், இத்தகைய டாட்டூக்கள் ஆபாசமானவை மற்றும் இழிவானவை. எனவே, சீருடை அணிந்திருக்கும் போதும் வெளியில் தெரியும் வகையில் டாட்டூக்கள் போடுவதற்கு இன்று முதல் அனுமதிக்கப்படாது.
அதோடு, ஏற்கெனவே இத்தகைய டாட்டூக்கள் போட்டிருக்கும் அதிகாரிகள் எளிதில் அடையாளம் காணக்கூடியவர்கள் என்பதால், அவர்கள் இந்த உத்தரவைப் பெற்ற 15 நாள்களுக்குள் அந்த டாட்டூக்களை நிரந்தரமாக அகற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இந்த உத்தரவைப் பின்பற்றாதவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் .
இருபினும் இந்த உத்தரவுக்கு பல தரப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மூத்த வழக்கறிஞர், ``ஒரு போலீஸ் அதிகாரி தனது பெயரையோ அல்லது அவர் விரும்பும் கருப்பொருளையோ டாட்டூவாகப் போட்டுக்கொண்டால், மூத்த அதிகாரிகள் அதை ஆட்சேபிக்கக்கூடாது. ஒரு அதிகாரியின் நடத்தை என்பது அவரின் கடமையை வைத்து மதிப்பிடப்பட வேண்டுமே தவிர, அவரது டாட்டூவை வைத்து அல்ல, எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.