காவலர்கள் தங்கள் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை ஒட்டக் கூடாது : டிஜிபி உத்தரவு
Tamil Nadu Police
By Irumporai
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டு வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.அதில், காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் ,போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டது.
அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உத்தரவை பின்பற்றியது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.