அவரால் உங்களுக்கு தான் அவமானம்...! அமைச்சரை டார்கெட் செய்து முதல்வரிடம் கேள்வி எழுப்பும் பாஜக!!

M K Stalin DMK BJP Mano Thangaraj
By Akkash Nov 30, 2023 06:06 AM GMT
Report

மனோ தங்கராஜை விமர்சித்து தமிழக பாஜகாவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தல் ஒன்றை வைத்துள்ளார்.

நாராயணன் திருப்பதி பதிவு!!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சமூக ஊடகங்களில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அந்த பணிக்கு கட்சிகாரர்களை நியமித்து சம்பளம் வழங்குவதாக மார்தட்டி கொள்ளும் தமிழக அரசின் அமைச்சர் பொய் பேசலாமா?

remove-manothangaraj-from-cabinet-urges-narayanan

7 மணிக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்களை பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்த கூடாது, வீட்டிலிருந்து பணியிடத்திற்கு நிறுவனமே அழைத்து செல்ல வேண்டும், இரவு 7 மணிக்கு மேல் நான்கு பெண்கள் இணைந்து பணியாற்ற வேண்டும், தரமான உணவு அளிக்கப்பட வேண்டும், பாலியல் தொல்லைகள் இல்லாத வகையில் நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் இரவு நேர பணிக்கு வர மறுத்தால் பணியிலிருந்து நீக்க கூடாது, அப்படி நீக்கினால் நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பெண்கள் பாதுகாப்பு குறித்த உத்தரவை உத்தரபிரதேச அரசு விதித்திருக்கும் போது, எதையும் தெரிந்து கொள்ளாமல் ஏனோ, தானோ, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அமைச்சர் மனோதங்கராஜ் பதிவிட்டிருப்பது தமிழகத்திற்கு அவமானம்.


என்ன செய்வது நமக்கு வாய்த்த அமைச்சர் அவ்வளவு தான்!! அவர்களே, தயவு செய்து இந்த பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற, ஒன்றும் தெரியாத அமைச்சரை நீக்கி விடுங்கள். இல்லையேல் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தான் அவமானம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.