சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் நீக்கம்!
தஞ்சை அருகே அதிமுக பிரமுகர் ஒருவர் தனது மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை அளித்தது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவர் கட்சியில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் பொறுப்பு வகித்து வந்தவர் வேல்முருகன் தனியார்நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மகளுடன் 10ஆம் வகுப்பு படிக்கும் 15வயது சிறுமிக்கு தனது மகள் அனுப்புவது போல் வாட்ஸ் அப்பில் பதிவுகளை அனுப்பிவந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் சிறுமியின் வீட்டருகே வாடகைக்கு வீடு பிடித்து தங்கியுள்ளார்.
அப்போது அந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அவர்களின் புகாரினை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் வேல்முருகனை கைது செய்து சிறையிலடைத்தார்.
இந்த நிலையில், மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட வேல்முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.