கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் திடீர் நீக்கம் - அரசு விளக்கம்!

COVID-19 Vaccine Narendra Modi Government Of India
By Swetha May 02, 2024 07:44 AM GMT
Report

கோவிட் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டதற்கு சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

தடுப்பூசி சான்றிதழ்

கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர், பலர் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்ததது. மொத்தம் மூன்று அலையாக பரவிய கொரோனா வைரஸ் தாக்கியது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் திடீர் நீக்கம் - அரசு விளக்கம்! | Removal Of Modis Picture From Vaccine Certificates

இந்த பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த அரசு உடனே தடுப்பு மருந்தை உருவாக்க முயற்சித்தது.ஒட்டுமொத்த மருத்துவ துறையுமே இதற்காக போராடியது. இதனை அடுத்து கொரோனாக்கான தடுப்பூசியை உருவாக்கின. அந்தவகையில், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி, நோவாக்ஸ், பைஃசர் என பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் போடப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் இந்த ஊசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ் அப்பிலேயே தடுப்பூசி சான்றிதழை எளிமையாக பெற முடியும் - எப்படி தெரியுமா?

இனி வாட்ஸ் அப்பிலேயே தடுப்பூசி சான்றிதழை எளிமையாக பெற முடியும் - எப்படி தெரியுமா?

 மோடி படம்

முன்னதாக, கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் இந்த கோவின் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் உருவபடம் அந்த இதழின் இடது பக்கம் அமைந்திருக்கும். ஆனால், தற்போது இதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதை பற்றி நெட்டிசன்கள் பலர் பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் திடீர் நீக்கம் - அரசு விளக்கம்! | Removal Of Modis Picture From Vaccine Certificates

இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சக அதிகாரிகள் பேசுகையில், “மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

மோடியின் புகைப்படம் நீக்குவது முதல்முறையல்ல. கடந்த 2022ம் ஆண்டில், நடந்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா தேர்தல்களிலும் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.