ஹஜ் பயணத்திற்கான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் - சவூதி அரேபியா அரசு அதிரடி
COVID-19
Saudi Arabia
By Thahir
ஹஜ் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை குறைந்த நிலையில், கொரோனா கால கட்டுப்பாடுகளை நீக்கிய சவூதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹஜ் பயணத்திற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
ஹச் பயணத்துக்கு கொரோனா காலங்களில் சவுதி அரேபியா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் கொரோனா காலங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை குறைந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடுகளை நீக்கி சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹச் பயணம் மேற்கொள்ளலாம் என அமைச்சர் தவுபீக் அல் ரபியா தெரிவித்துள்ளார்.