சென்னை அணியால் மறக்க முடியாத மே 12 ஆம் தேதி - மும்பை அணியை பழிவாங்குமா?

MS Dhoni Chennai Super Kings Mumbai Indians TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan May 12, 2022 10:54 AM GMT
Report

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை -  மும்பை அணிகள் மோதவுள்ள நிலையில் இன்றைய நாள் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அணி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது.

கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய 2022 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் முதல் அணியாக தொடரை விட்டு வெளியே மும்பை அணி சென்றுள்ளது. சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றாலும் நூழிலையிலான வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே முதல் சுற்றில் நடந்த போட்டியில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற முனைப்பு காட்டும் அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி காத்துள்ளது. இந்நிலையில்  கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை - மும்பை அணிகள் இதே மே 12 ஆம் தேதி மோதியது. இப்போட்டியில் மும்பை அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. எனவே அதே நாளில் சென்னை - மும்பை அணிகள் மோதுவதால் எப்படியாவது சென்னை அணி வெற்றி பெற வேண்டுமென ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.