மதுரையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை திடீர் நிறுத்தம் - பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருப்பு

Corona Madurai Remdesivir
By mohanelango May 09, 2021 07:46 AM GMT
Report

கொரோனோ பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மதுரையில் நேற்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது.

தமிழ்நாடு மருத்துவ கழகம் சார்பில் மதுரை அரசு மருத்துவ கல்லூரயில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு நாளில் 500 பாட்டில் மருந்துகள் முழுவதுமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மருந்துகள் இருப்பு இல்லாத நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவகல்லூரி முன்பாக குவிந்தனர்.

மதுரையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை திடீர் நிறுத்தம் - பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருப்பு | Remdesivir Medicine Sale Halted In Madurai Gh

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் திடிரென இன்று விடுமுறை என அறிவிப்பை ஒட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நீண்டநேரமாக காத்திருந்தனர்.

அரசு போதிய அறிவிப்பு வெளியிடாத நிலையில் வீணாக அலையவிட்டதாகவும், திடீரென விடுமுறை அறிவிப்பு வெளியிட்டதால் அரசு அலட்சியமாக செயல்படுவதாகவும், போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே மருத்துவகல்லூரி முன்பாக கூடிய பொதுமக்களை போலிசார் அப்புறப்படுத்தினர்.