நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை: தமிழக அரசு அதிரடி!

tamilnadu remdecivir nehrustadium
By Irumporai May 13, 2021 10:53 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இருந்துவரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்திற்கான பற்றாக்குறை இருந்து வருகிறது.

ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருவதால் அங்கு பதட்டம் நிலவுகிறது. மேலும் தனிமனித இடைவெளியின்றி பொது மக்கள் நிற்பதால் கொரோனா பரவும் அபாயமும் உள்ளது.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வருபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது

. இதனை தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தது. இக்கட்டான சூழலில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வரும் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் என கருதப்படுகிறது.