15-வது முறையாக நீட்டிப்பு..!! தவிக்கும் செந்தில் பாலாஜி..!!
அமைச்சர் யின் பிணையை மீண்டும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் கைதான சூழலில், அப்போதிலிருந்து தொடர் சிக்கலில் செந்தில் பாலாஜி இருக்கின்றார்.
இதற்கிடையில், நேற்று முதல் கரூரில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே ராம்நகர் பகுதியில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் புதிதாக கட்டி வரும் ஆடம்பர பங்களாவில் வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு குழு ஆய்வு நடத்தி வந்தனர்.
மீண்டும் நீட்டிப்பு
நாளை, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவில் சென்னை முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அவரது தம்பி மற்றும் அவரின் நண்பர் வீட்டில் நடைபெற்ற ஆய்வு பெரும் முக்கியத்துவம் பெற்றது.
அதில், 15-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம், அவருக்கு வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.