விஜய் பற்றி சீமான் சொன்னதுதான் சரி; அப்போ எங்க போனாரு? கொதித்த பிரேமலதா
மறைந்த பிறகுதான் விஜய்க்கு அண்ணனாக தெரிகிறாரா கேப்டன் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் புகழாரம்
தவெக மாநாட்டில் விஜயகாந்த் குறித்து விஜய் பேசியதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “அரசியலில் வாக்கை பிரிப்பதற்காக கேப்டன் விஜயகாந்த் படத்தை, பெயரை விஜய் பயன்படுத்துகிறாரா? எங்களுக்கென தனி இயக்கம் இருக்கிறது. கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான். யாரும் அவரது இடத்தை நிரப்ப முடியாது.
எங்கள் கட்சியில் வாரிசுகள் இருக்கிறார்கள். கேப்டன் பெயரை வேறொருவர் பயன்படுத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம். விஜயகாந்தின் படத்தையும், பெயரையும், அரசியலுக்காக விஜய் படுத்தினால் அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
எகிறிய பிரேமலதா
கேப்டனை அரசியல் ரீதியாக தவெக அணுகும் பட்சத்தில் அது தவறு. விஜயை சின்ன வயசுல இருந்தே தெரியும், எங்க பையன் மாதிரி தான்.. அண்ணா என்று சொல்லி கேப்டன் வாக்குகளை பெற முயற்சி செய்கிறாரா விஜய். உடல் நலிவுற்றிருந்தபோது அண்ணனாக தெரியாத விஜயகாந்த் ,
மறைந்த பிறகுதான் விஜய்க்கு அண்ணனாக தெரிகிறாரா என்ற சீமானின் கேள்வி நியாயமானது. உலகம் அறிந்த உண்மையை சீமான் அவர்கள் உரக்கச் சொல்லி இருக்கிறார். விஜய் பற்றி சீமான் சொன்னது 100 சதவீதம் உண்மை.
ஒருநாளும் யாரும் விஜயகாந்த்தாக மாறிவிட முடியாது. அன்பின் வெளிப்பாடாக அண்ணனாக விஜயகாந்த் குறித்து மாநாட்டில் விஜய் பேசினார். இதனை அரசியல் ரீதியாக தவெகவினர் அணுகினால் அது தவறானது" எனத் தெரிவித்துள்ளார்.